ஏலக்காயில் அப்படி என்ன நன்மை கிடைக்க போகுது?

ஏலக்காய் எல்லா ருசி வரக்கூடிய உணவிலும் சேர்க்கப்பட்டு இருக்கும். குறிப்பாக சொன்னால் பிரியாணி, பாயாசம் போன்றவை ஆகும். இதன் ருசியை போலவே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஏலக்காயின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏலக்காயின் நன்மைகள்:-

  • செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குமட்டல், வாய்வு, ஏப்பம், வாந்தி, மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்ய ஏலக்காய் பயன்படுகிறது.
  • ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். மேலும் சிறுநீரக குழாயை சுத்தமாக்கும்.
  • ஏலக்காய் தேநீர் குடித்தால் வேலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தை கட்டுபடுத்த முடியும். என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • ஏலக்காயை கசாயம் செய்து குடித்தால் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை குணமாகும். மேலும் இதயத்தில் உள்ள இரத்தத்தை உறையாமல் வைக்கும்.
  • தொடர்ச்சியாக விக்கல் ஏற்பட்டால் இரண்டு ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலை மற்றும் நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் விக்கல் நின்று விடும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.