கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

பொதுவாக நமது பகுதியில் இரண்டு வகையான கரும்புகள் கிடைக்கிறது. ஒன்று செங்கரும்பு இது பொதுவாக பொங்கல் சமயத்தில் மட்டுமே கிடைக்கிறது. மற்றொன்று வெண்கரும்பு இது எல்லா சமயத்திலும் அறுவடை செய்யப்படுகிறது. கடைகளில் கரும்புச்சாறு தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கவும் பயன்படுகிறது. கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

  • கரும்பை சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
  • இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
  • கரும்பின் வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
  • கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம்.
  • உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
  • மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  • கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.
  • நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.