தேன் சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கம் பெறலாம்

பழங்காலத்தில் இருந்து மனிதனுக்கு இயற்கையாகவே  தேன் கிடைக்கிறது. தேனில் 50 –க்கும் மேற்பட்ட வைட்டமின் சத்துக்கள் அடங்கி உள்ளது. கொம்பு தேன், மலைத்தேன், புற்று தேன் என பல வகைப்படும். தேனானது பல வகையான மரத்தில் உள்ள பூக்களில் இருந்து பெறப்படுவதால் அந்தந்த பூக்களில் உள்ள மருத்துவ குணங்களை பெற்று விடுகிறது.  பின்வரும் பிரச்சனைகளை தேன் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

  • பித்தம், வாந்தி, வாயுத்தொல்லை ஆகியவற்றை நீக்கும் குணம் பெற்றது.
  • அதிக வீரியம் உள்ள மருந்துகளை சாப்பிடும் போது சிறிது தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் குடலில் ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கிறது.
  • தேன் கலந்த பானம் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் கலைப்பை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க செய்ய உதவுகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் அதில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் இரவில் நிம்மதியான தூக்கம் பெறலாம்.
  • வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் ஏற்படும் புண், அலர்ஜி, மற்றும் அல்சர் நோயை குணப்படுத்தும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment