கற்றாழையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக, கற்றாழையை நமது வீட்டில் நாம் அலங்கார பொருளாக மட்டுமே பயன்படுத்தியிருப்போம். அப்படிப்பட்ட கற்றாழையை நமது சருமப் பிரச்சனைகள் பலவற்றை தீர்க்கவும் பயன்படுத்தலாம்.

– கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க கற்றாழை சாற்றை ( gel )தினமும் இரவு படுக்கும் முன் கண்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

– கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை நீக்கவும் கற்றாழை சாற்றை நாம் பயன்படுத்தலாம்.

– நமது உடலில் எங்கேனும் வெளிக்காயங்கள் அல்லது பூச்சிக்கடிகள் இருந்தால் அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் மெல்ல மெல்ல எரிச்சல் குறையும்.

– வெளியில் அடிக்கடி சென்று வருபவர்களுக்கு சருமம் விரைவில் வறண்டுவிடும். வீட்டில் இருக்கும்போது கற்றாழை சாற்றை வறண்ட சருமத்தின் மீது அடிக்கடி தடவி வந்தால் சருமம் தேவையான ஈரப்பத்த்துடன் மீண்டும் மிருதுவாகும்.

– ஆண்கள் சவரம் செய்த பின்பு கற்றாழை சாற்றை தடவினால் உடனே எரிச்சல் நீங்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment