மூலிகை டீயுடன் புதினா சேர்த்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

மூலிகை பொருள்களில் புதினாவிற்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. இதை சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தால் அவதிபடுபவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். புதினாவை அப்படியே கூட சாப்பிடலாம். இருப்பினும் துவையல் அல்லது தேநீர் தயாரித்து குடிப்பதால் அதன் சுவை முழுமையாக வெளிப்படும். இப்போது புதினாவை தேநீருடன் சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

புதினாவை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் முறை:-

முதலில் நீரை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் புதினாவை போட்டு அது மூழ்கும் வரை கொதிக்க வைத்த நீரை ஊற்றி 5 நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கலாம். தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிப்பது நல்லது.

நன்மைகள்:-

  • உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் டி சத்துகள் முழுமையாக கிடைக்கிறது.
  • சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு பெருங்குடலில் ஏற்படும் அழற்சியை வராமல் தடுக்கும்.
  • இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
  • செரிமான மண்டலத்தை சீராக இயக்கி செரிமானத்திற்கு உதவுகிறது.
  • நரம்பு மண்டலம், கல்லீரல், கணையம், போன்றவற்றிகு நன்மை அளிக்கக் கூடிய சிறந்த பானம்.
  • உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.