எலுமிச்சை தேநீரில் முகத்தை கழுவினால் என்ன ஆகும் தெரியுமா?

சருமத்தை அழகாக்க கடைகளில் கிரீம்களை வாங்கி உபயோக படுத்துவதற்கு பதிலாக வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தினாலே போதும். அந்த வகையில் எலுமிச்சை நீரால் முகத்தை கழுவினால் ஏற்படும் மாற்றத்தை இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை தேநீர் செய்யும் முறை:-

ஒரு கப் நீரில் சிறிது தேயிலை பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சைச் சாற்றினை பிழிந்தால் போதும் தேநீர் தயார்.

நன்மைகள்:-

  • டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பரு பிரச்சனைகளை எதிர்த்து போராடி முகப்பருவை அழிப்பதுடன் தழும்பினை முழுவதுமாக மறைக்கிறது.
  • முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை மறைக்கிறது. மேலும் வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தை அழகாக்க பயன்படுகிறது.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனால் முகத்தை காலை, மாலை என இரு வேளைகளிலும் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.
  • லெமன் டீயை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை முழுவதுமாக நீங்கிவிடும்.
  • இந்த டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை அழகாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் பாதுகாக்கிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.