அற்புதமான ஐந்து பழங்களும்! அதன் நன்மைகளும்!

இயற்கையாக கிடைக்கும் எல்லா பழங்களும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட ஐந்து பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

அற்புதமான ஐந்து பழங்களும், அதன் நன்மைகளும்:-

  • மாம்பழத்தில் விட்டமின் ஏ, பி6, மினரல்ஸ்கள், கலோரிகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. இதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். சருமம் அழகாகும். கண் பார்வை தெளிவாகும்.
  • கொய்யாப் பழத்தில் அதிக அளவிலான விட்டமின் – சி அடங்கியுள்ளன. இதை தினமும் சாப்பிடு வந்தால் எலும்புகள் வலிமை அடையும். மலச்சிக்கல், இரத்த சோகை போன்ற பிரச்சனைகளும் தீரும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • பப்பாளி எல்லா நாள்களிலும் கிடைக்கும் ஒரு பழம். இதில் அதிக அளவிலான வைட்டமின் – ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளது. இதை சாப்பிடுவதால் சிறுநீரக சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனையும் வராது. இரத்தம் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும்.
  • அன்னாசி பழத்தில் அதிக அளவிலான பி1, பி6, உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகாமாகும். சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • விளாம்பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் – ஏ, கால்சியம் போன்றவை அடங்கியுள்ளது. இந்த பழத்துடன் வெல்லம் சேர்த்து 21 நாள்கள் சாப்பிட்டால் கை, கால்களில் ஏற்படும் வலி, கிறுகிறுப்பு, இளநரை, கண் பார்வை மங்கலாக தெரிதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.