சோளத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

சோளத்தில் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் உள்ளன. முக்கியமாக சொல்லவேண்டுமெனில் நார்ச்சத்து, ஆண்டி – ஆக்ஸிடெண்ட்களையும் கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கும் சோளங்களே சிறந்தது. மரபணு மாற்றம் மூலம் கிடைக்கும் சோளம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தமும், உடலில் மரபணு மாற்றமும் ஏற்படுகிறது. சோளத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சோளத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-

  • மஞ்சள் நிற சோளத்தில் 390 மில்லி கிராம் பொட்டாசியமும், வெள்ளைநிற சோளத்தில் 410 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பயன்படுகிறது.
  • இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இறந்த செல்களை புதுப்பிக்கவும், புதியதாக செல்களை உருவாக்கவும் செய்கிறது.
  • இதய நோய் மற்றும் புற்று நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற கூடியது.
  • சோளத்தில் உள்ள வைட்டமின் சி, இ கண்களுக்கு மிகவும் நல்லது.
  • ஒரு நாளைக்கு தேவையான கலோரியின் அளவை ஒரு கப் சோளம் கொண்டுள்ளது. இதனால் ஊட்டச்சத்துகளை குறைவில்லாமல் பெற முடியும்.
  • நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் மலச்சிக்கலை போக்கும் திறன் கொண்டது.
  • சோளம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப சோளத்தை சாப்பிடுவது நல்லது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.