பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது

பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது:-

இந்தியாவில் உள்ள வாகனங்களில் பழைய வாகனமான சேட்டக் ஸ்கூட்டருக்கு தனி அடையாளம் உண்டு. அதனால் பஜாஜ் நிறுவனம் அதிக வசதிகளுடன் மீண்டும் அந்த வாகனத்தை சந்தைக்கு கொண்டு வரும் நோக்கில் உள்ளது.

சேட்டக் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது ஹமாரா பஜாஜ் என்பது மட்டுமே.

கடந்த 2009 ஆம் ஆண்டில் குறைந்த அளவிலான விற்பனையின் காரணமாக அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு சந்தையிலிருந்து வெளியேறியது.

நவீன வசதிகள் கொண்ட ஸ்கூட்டியின் காரணமாக விற்பனை குறைந்த சேட்டக் இப்போது சில நவீன வசதிகளுடனும், கியர் இல்லாமலும் வரப்போகிறது.

ஆனால் அதே பழைய தோற்றத்துடன் வர இருக்கிறது.     சேட்டக் ஸ்கூட்டியில் 125 அல்லது 150 சிசி எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் உருவ அமைப்பில் வெஸ்பா மாடல் ஸ்கூட்டிக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஸ்கூட்டியானது காப்புரிமைக்கு காத்து இருக்கும் சூழ்நிலையில் ஹெட், டெயில் லேம்ப், சுவிச்சுகள் போன்ற சில பாகங்களின் படங்கள் மட்டுமே வெளிவந்து உள்ளது. இந்த ஆண்டின் மத்தியில் இந்த ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Add Your Comment