கற்றாழை சாறுடன் பூண்டு சாறு கலந்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இயற்கையாக தயாரிக்கப்படும் ஜூஸ்களில் ஒன்றையாவது தினசரி குடித்தாலே போதும்.  இயற்கை பானங்கள் நிறைய இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பானத்திற்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் கற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பானம் தயாரிக்கும் முறை:-

கற்றாழை மற்றும் பூண்டின் சாறை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் போதும் ஜூஸ் தயார்.

கற்றாழை சாறுடன் பூண்டு சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்:-

  • கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இதை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.
  • இந்த ஜூஸை குடித்தால் சுவாச பாதையில் உள்ள உட்காயங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளை சரி செய்கிறது. மேலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் இதை குடித்தால் குணமாகலாம்.
  • இந்த ஜூஸில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் அதிகமாக உள்ளன. இதனால் உடலில் புற்று நோய் ஏற்படுத்தக் கூடிய செல்களை அழிப்பதோடு புற்று நோய் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் சில உடல் உபாதைகளை வராமல் தடுக்கிறது.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் இந்த பானத்தை குடித்தால் இரத்த அழுத்தம் படிபடியாக குறையும்.
  • மூளைக்கு தேவையான சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ள இந்த ஜூஸை குடித்தால் ஞாபக் மறதி பிரச்சனையை சரி செய்யலாம்.

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.