கற்றாழையை பற்றி நமக்கு தெரியாத சில முக்கியமான பயன்கள்!

கற்றாழை மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். கற்றாழையை அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் பயன்படுத்தலாம். முக்கியமாக சொல்லவேண்டுமெனில் தலைமுடி வளர்ச்சி, வயிற்று புண், இரத்த சுத்திகரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுகிறது. ஆனால் அதனால் ஏற்படும் மற்ற முக்கியமான பயன்களை இப்போது பார்க்கலாம்.

கற்றாழையின் சில முக்கியமான பயன்கள்:

  • சோத்து கற்றாழையில் உள்ள சாறை எடுத்து எண்ணெயிலிட்டு காய்ச்சி தலையில் தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.
  • கண்களில் அடிபட்டோ அல்லது மற்ற காரணத்தால் கண் சிவந்து வீங்கி இருந்தால் கற்றாழை சோற்றை கண்களில் வைத்து கட்டி இரவு தூங்கினால் இரண்டு நாள்களில் சரியாகிவிடும்.
  • மூட்டி வலிக்கு பயன்படுத்தப்படும் அலோசன் மருந்து இந்த கற்றாழையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் அதிக அளவிலான கால்சியமும் உள்ளது.
  • கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து 1 மாதம் வெயிலில் வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் பச்சை நிறத்தில் இருக்கும். இதனை குளியலுக்கு பயன்படுத்தினால் பித்தம் தணியும், உடல் குளிர்ச்சி பெறும்.
  • கற்றாழை ஜெல்லுடன் விளக்கெண்ணெய், பனங்கற்கண்டு, வெள்ளை வெங்காயத்தின் சாறு ஆகியவற்றை கலந்து இதமான தீயில் காய்ச்சி அதை காலை, மாலை இருவேளைகளிலும் குடித்து வந்தால் மந்தம், வயிற்று வலி, பசியின்மை, வயிற்று பொருமல் ஆகியவை குணமாகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.