பட்டுப் போன்ற அழகான சருமத்தை பெற உதவும் எளிய வழிகள்!

அழகான சருமம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் எல்லோரும் அழகான சருமத்தை பெற பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே நாம் அழகான சருமத்தை பெறலாம். அதை இப்போது பார்க்கலாம்.

பட்டுப் போன்ற அழகான சருமத்தை பெற உதவும் எளிய வழிகள்:-

  • அன்னாசி பழத்தை தொடர்ச்சியாக ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் சருமம் அழகானதாக மாறும்.
  • சந்தனப் பவுடருடன் கடலை மாவையும் பாலையும் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகாக மாறும்.
  • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காய வைத்து பாதாம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் சேர்த்து முகத்தில் பூசினால் அழகான சருமம் கிடைக்கும்.
  • பொடி மற்றும் வேப்ப இலை பவுடர் இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி கழுவினால் எண்ணெய் பசை மற்றும் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
  • கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் சிறிதளவு, நறுமண மலர்ச் செடியின் சாறு மூன்றையும் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
  • தக்காளி சாறு, பால், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  • உங்கள் சருமம் எண்ணெய் பசையுடன் இருந்தால் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து உபயோகித்தால் முகம் பொலிவடையும்.
  • சமையல் சோடவுடன் தேன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.