அழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?

சமையல் செய்யும் போது உணவின் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்ப்பார்கள். அதை பெரும்பாலும் ஒதுக்கி வைப்பதே நமது வழக்கம். இருந்தாலும் அதை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு மற்றுமொரு சிறப்பம்சமாக இது அமைந்துள்ளது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் இரண்டுமே விலை குறைவு தான். சொல்லப் போனால் நாம் காய்கறி வாங்கிவிட்டு அதை இலவசமாக தான் கடைகளில் பெறுகிறோம். இவை இரண்டையும் பயன்படுத்தி அழகை அதிகரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

அழகை அதிகரிக்க கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை பயன்படுத்தும் முறை:-

  • கறிவேப்பிலையை பயன்படுத்தி முடியின் வளர்ர்சியை அதிகரிக்கலாம் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் அதை பயன்படுத்தி கரும்புள்ளிகளை முற்றிலுமாக மறைக்கலாம். கறிவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிடைக்கும் நீரினால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் முற்றிலும் மறையும்.
  • உங்கள் சருமம் வறட்சியடைந்து காணப்படுகிறதா? அப்படியெனில் கொத்தமல்லி இலையை பசையாக்கி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.