குப்பை மேனி எளிதில் கிடைப்பது போலவே அதன் பயனும் கிடைக்கிறது!!!

சிறப்பு அம்சங்கள்:

குப்பை மேனி இலைகளை நன்கு அரைத்து அதன் சாற்றை வடிகட்டி குடித்து  வர மலச்சிக்கல் பிரச்சனைகள் வராது. இந்த சாற்றை மேக புண்களுக்கு பயன்படுத்த விரைவில் ஆறும்.

சிறு குழந்தைகளுக்கு அலற்சியால் அடிக்கடி ஏற்பட கூடிய  இருமல் சளி தொல்லைகளுக்கு இதன் சாற்றை வெந்நீருடன் அல்லது சாதாரண  நீருடன் கலந்து கொடுக்க குழந்தைக்கு சரி ஆகி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

வயிற்றில் ஏற்படும் புழுக்கள்  மற்றும் கிருமிகளால் ஏற்படும் வலிகள், எரிச்சல், கடுப்புகள் நீங்க குப்பை மேனியை அரைத்து வேப்பிலை சாற்றையும் சேர்த்து கொள்ள கிருமிகள் அழிந்து விடும்.  இதே போல் வேப்பிலை எண்ணெயையும் சேர்த்து  வயிற்று குமட்டல் இருப்பவர்கள் சிறு துளி வாயில் இட வாந்தி மூலம் அனைத்தும் வெளியே வந்து நன்மை பயக்கும்.

உடல் அழகும் ஆரோக்கியமும் பெற குப்பை மேனியை அரைத்து அதனுடன் பால் கலந்து குடித்து வர மாற்றத்தை காணலாம், தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.