Sugar, Bp தவிர்க்க பாரம்பரிய மாட்டுப்பால்

பாரம்பரிய மாடுகளின் பெயர்களே தெரியாத இன்றய தலைமுறையினர் அவை தரும் பாலின் மகத்துவத்தை எப்படி தெரிந்து இருக்க முடியும். என்பது தொண்ணுறு வயதை கடக்கும் பாட்டி கூட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து ஆச்சிரியம் கொள்வோம். காரணம் அவ்வாறு நல்ல உடல் நிலை உள்ள மூதாட்டியை பார்க்கும் நமக்கோ சர்க்கரை இரத்த அழுத்தம் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் ஒன்றாவது நமக்கு இருக்கும். நம் மூதாதையர்கள் நம்முடைய பாரம்பரிய உணவு, பாரம்பரிய மாட்டுப்பால், வெப்ப நிலையை கருத்தில் கொண்டு நீர் ஆகாரம் , இத்துடன் சோர்வறியா கடின உழைப்பு போன்ற காரணிகள் அவர்களின் அவர்களின் உடல் நலத்தை பேணிக்காத்தன.

தமிழ் நாட்டின் பாரம்பரிய மாடுகளான காங்கேயம் காளை, பர்கூர் மாடு, புளியகுளம் பட்டி மாடு, தேனி மலை மாடு, உம்பளச்சேரி மாடுகள் அழிந்து வரும் சூழலில் உள்ளது. தமிழ் நாட்டில் 1990 களில் 11 லட்சம் 74ஆயிரம் என்றிருந்த காங்கேயம் மாடுகள் ஒரு 2015 இல், லட்சத்திற்கும் கீழ் என்று சொல்லும் நிலையில்தான் உள்ளது. நமது மாடுகள் உழைப்பிற்காக அறியப்பட்டவை வெள்ளைப்புரட்சிக்கு பின் உழைக்கும் காளைகளை தாழ்வாக பார்த்த குணத்தாலும் அதிக பாலுக்காக வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்பியதாலும் இந்த அவலம் நிகழ்ந்தது.

மாடுகளை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று வெளிநாட்டு கலப்பின மாடு (செயற்கை முறையில் கருத்தரித்தது) மற்றொன்று உள்நாட்டு பரமப்பரிய மாடுகள். இதே போல் அவைதரும் பாலினையும் இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கலப்பின மாடுகள் தரும் A1 பால் இரண்டாவது பாரம்பரிய மாடுகள் தரும் A2 பால்.

உள்நாட்டு பாரம்பரிய மாடுகள் தரும் A2 பாலில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் வெளிநாட்டு கலப்பின மாடுகள் தரும் A1 பாலில் அதை போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டிருக்கவில்லை (Neuro peptides,2011Jun). மேலும் சர்க்கரை, மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்றவை உருவாக்கும் வல்லமை கொண்ட வேதிப்பொருளான beta casomorphin யை உணவில் சேராத நிலையில் நம் முன்னோர்கள் இந்த மாதிரி நோயில் இருந்து தப்பினர். இதற்க்கு காரணம் நம் பாரம்பரிய மாடுகள் தந்த பால் தான்.

மேலும் சில சமயம் சிறு குழந்தைகள் A1 பாலை உட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு Type 1நீரிழிவு நோய் (ஆயுள் முழுவதும் இன்சுலின் இட்டுக்கொள்ளும் நிலை) ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் காட்டிலும் கலப்பின மாடுகள் தரும் A1 பாலில் உள்ள அதிக கொழுப்புகள் இரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை உண்டாக்கும் வல்லமை கொண்டது (authoritynutrition.com) ஆனால் பாரம்பரிய மாடுகள் தரும் A2 பாலில் அவை மிக மிக குறைவு.

நண்பர்களே இனிமேலாவது நம் பாரம்பரிய மாடுகள் தரும் A2 வகை பாலை உட்கொள்வதன் மூலம், நம் உடல் நலத்தை பேணிக்காப்போம், தேவையற்ற சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்களில் இருந்து நம்மை காப்போம். இதனை செய்வதால் அழிவில் இருக்கும் நம் பாரம்பரிய மாடுகள் அரும்பி மலரும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.