முகத்தை அழகாக்க சந்தனம் எப்படி பயன்படுகிறது தெரியுமா?

முகம் கருப்பாக இருந்தாலும் கவலை, வெள்ளையாக இருந்து பொலிவிழந்து காணப்பட்டாலும் கவலையாக இருக்கிறதா. முகத்தை  சந்தனம் மூலம் அழகாக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

சந்தனத்தின் பயன்கள்:-

  • சந்தனமானது சருமத்தில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்க உதவுகிறது.
  • கண்ணில் உள்ள கருவளையம், முகப்பரு, தழும்பு போன்றவற்றை சரி செய்ய பயன்படுகிறது.
  • சந்தன பவுடர் மற்றும் பால் கலந்த கலவையை முகத்தில் தேய்ப்பதன் மூலம் அழுக்கை வெளியேற்றி சருமம் வெண்மையாக மாற உதவுகிறது.
  • கற்றாழை ஜெல்லை சந்தனத்துடன் கலந்து முகத்தில் தேய்ப்பதன் மூலம் வெயிலால் கருப்பான சருமம் வெள்ளையாகும்.
  • சந்தனம், மஞ்சள், பால் மூன்றையும் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்பு காய்த்த பிறகு முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
  • முகப்பரு அதிகம் உள்ளவர்கள் சந்தனத்தையும் வேப்பிலையையும் பொடி செய்து முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவினால் பருக்கள் மறையும்.
  • சந்தனத்தை மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை முகத்தில் பயன்படுத்தினால் முகம் பளிச்சென மாறும்.
  • சந்தனப் பவுடருடன் கடலை மாவையும் பாலையும் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகாக மாறும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.