மிதுனம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

மிதுனம் ராசியினருக்கு 2018ம் வருடம் அதிக அளவில் நன்மைகள் நடைபெறும் ஆண்டாக இருக்கிறது.பணிவாகவும், நிதானமாகவும் செயல் பட்டால் பெருமைகள் வரக்கூடிய வருஷமாக இருக்கிறது. மிதுன ராசியினருக்கு ஐந்தாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் வீட்டில் மங்களம் நிகழ்ச்சிகள் ஏற்படும். ஒன்பதாம் பார்வையாக குரு ராசியின் மீது பார்ப்பதால் எதிர்கால வாழ்க்கை துணை அமைந்து அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெற்று விடும். பணம் தட்டுப்பாடு இல்லாமல் சீராக பணவரவு, தொழில், வேலை அமைந்து விடும். நினைத்தது நடைபெறும் ஆண்டாக இருக்க போகிறது.

பொதுவான பலன்கள்

மிதுனம் ராசியினருக்கு பயணங்கள் வெற்றி அளிக்கும் விதமாக இருக்கிறது. புனித யாத்திரை, குலதெய்வ வழிபாடு, விடுபட்ட பிராத்தனைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கு, கடன் போன்றவற்றை அடைக்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். கேட்கின்ற இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு தடைபட்டு கொண்டு இருந்த விஷயம் யாவும் நன்மை அளிக்கும் விதமாக முடிவடையும்.

மிதுன ராசியினருக்கு மறைமுக எதிரிகள் தோன்றலாம் அதனால் வீண் வம்பு, வெட்டி பேச்சு, புகழ்ச்சிக்கு மயங்காமல் இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடித்தால் உங்கள் திறமையை அறிந்து கொள்ளும் நேரமாக இருக்கிறது. ஏழாம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும் எவ்வித தீமையும் செய்யாது. கணவன் மனைவி விட்டு கொடுத்து சென்றால் எவ்வித சண்டை மற்றும் பிரச்சனைகள் வீட்டில் ஏற்படாது. ஒரு சிலர்க்கு கருத்து வேறுபாடு தோன்றினாலும் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்க்க பாருங்கள்.

இனம் புரியாத பயம், தாழ்வு மனப்பான்மை நீங்கி புதிய உற்சாகம் , தெளிவு அடைவீர்கள். மிதுன ராசியினருக்கு பழைய கடனை அடைக்கும் விதமாக பொருளாதாரம் இருக்கும். புதிய கடன் வாங்க நேரிட்டாலும் அதனை திரும்ப கொடுக்கும் அளவிற்கு பண வரவு சீராக  இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

மேல் அதிகாரியின் ஆதரவு, சக ஊழியாளர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பணிவாக நடந்து கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும். இதுவரை எதோ காரணத்திர்காக பதவி, சம்பளம் உயர்வு இன்றி இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொறுப்புகள் கூடும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். கிடைக்கின்ற பொறுப்புகளை மற்றும் கடமைகளை தட்டி கழிக்காம விரைவில் திட்டமிட்டு செய்து முடித்து விடுங்கள். இதுவரை எதிர் பார்த்து கொண்டு இருந்த பணியிட மாற்றம் மற்றும் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும் காலமாக இருக்கிறது.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

மிதுனம் ராசியினருக்கு பயணங்கள் மற்றும் அது தொடர்பான விஷயத்தில் பணவரவு உண்டு. வியாபாரம், சொந்த தொழில் செய்பவராகள் தங்கள் அறிவாற்றலை முதலீடாக கொண்டு முன்னேற்றம் அடையும் காலமாக இருக்கிறது. வேலை, தொழில் போன்றவற்றில் தடை, சிக்கல் இருந்தவர்களுக்கு நினைத்தபடி தொழிலை சிறப்பாக செய்ய போதிய அளவிற்கு பணம் வரும்.

தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள் இதுவரை இருந்த நெருக்கடி அகன்று வளர்ச்சியும், வருமானமும் எதிர்பார்த்த படி வரும்.

தொழிலில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சக பணியாளர்களிடம், வாடிக்கையாளரிடம் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். ஆண்டின் ஆரம்பத்தில் சனி பகவான் சிறு தொல்லைகள் கொடுத்தாலும் பிற்பகுதியில் ஏற்றமாக தான் இருக்கும்.

 பெண்கள்        

பெண்களுக்கு விலையுயர்ந்த ஆபரணம், ஆடை, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கழுத்துநகை அணியும் நேரம் வந்து இருப்பதால் மிதுனம் ராசி பெண்கள் அவர்கள் வயதிற்கேற்ப மற்றும் வசதிக்கேற்ப அணிந்து மகிழ்வார்கள். இளம் பெண்கள் தாலிபாக்கியம் உண்டாகும் நேரமாக இந்த ஆண்டு இருக்கிறது. குழந்தை பிறக்காமல் தாமதம் ஆகி கொண்டு இருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் நீண்ட நாட்களுக்கு தள்ளி கொண்டு இருந்த திருமணம் பேச்சு வார்த்தை நல்ல படியாக முடிவடையும். பணவரவு சீராக இருக்கும் என்பதால் சுப நிகழிச்சிகள் நடத்துவதற்கு போதிய பணம் வரும்.

மாணவ மாணவிகள்

இதுவரை சோம்பலாக இருந்து படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வருடம் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். படிப்பு, போட்டிகள், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேரத்தை வீணாக்காமல் நவீன படிப்புகள் மற்றும் ஏதேனும் பயன்படும் விதமாக பயிற்சியில் சேரலாம்.

உடல் நிலை

இதுவரை இருந்த உடல் நலக்குறைவு யாவும் படிப்படியாக குறைய தொடங்கும். மனதில் புதிய உற்சாகம் மற்றும் தெளிவு பிறக்கும். இதுவரை இருந்து வந்த இனம் புரியாத பயம், தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள் யாவும் நீங்கி தெளிவு உண்டாகும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.