ஜல்லிக்கட்டுக்கு பிறகும் தொடர வேண்டிய சில இளைஞர் போராட்டங்கள்

எந்த ஒரு பெரிய பிரச்சனையும் ஆரம்பத்தில் ஒரு சிறிய தூசியாக இருந்து பின்னர் ஒரு மலையாக மாறியது தான். எனவே எந்த ஒரு பிரச்சனையையும் சிறியதாக இருக்கும் போதே கிள்ளி எறிவதே சிறந்த தன்மை. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனை இதில் ஒரு ஆரம்ப புள்ளி தான். அதை முடித்து வைக்க இன்னும் பல பிரச்சனைகளுக்கு போராட்டம் தொடர வேண்டியுள்ளது. அவற்றில் சில முக்கியமான பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம்.

தொடர வேண்டிய சில இளைஞர் போராட்டங்கள்:-

  • ஜல்லிக்கட்டுக்கு பின்னால் நாட்டு மாட்டை அழித்து கலப்பின மாடுகளை புகுத்தியது போல நாட்டு கோழி இனங்களை அழித்து விட்டு பிராய்லர் கோழிகளை புகுத்தி வருவது நமக்கே தெரியாமல் நடந்து வரும் சதி ஆகும். அதனால் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிராய்லர் கோழிகளை ஓழிப்பது கடமையாக கொள்ள வேண்டும்.
  • நமது மண்ணை மலடாக்கும் தன்மை கொண்டது சீமை கருவேல மரம் இந்த மரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.
  • அந்நிய குளிர்பானங்களான பெப்சி, கோக் குடிப்பதை நிறுத்தி விட்டு இளநீர் குடிக்க வேண்டும்.
  • கடையில் எந்த ஒரு பொருள் வாங்க சென்றாலும் கையில் காகித பை அல்லது துணி பைகளை எடுத்து செல்லுங்கள். பிளாஸ்டிக் பைகளை ஒழித்தால் நலம்.
  • வெளிநாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடை செய்து இயற்கை உரம் மற்றும் விதைகளை பயன்படுத்துவது நலம்.
  • தலைவர்களை தேர்வு செய்வதை விட சிறந்த தலைவனை உருவாக்குவது சிறந்தது. அதற்கான நேரம் தான் இது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.