எலுமிச்சைப் பழத்தை கொதிக்க வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

எலுமிச்சைப் பழம் உடல், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என அனைத்திலும் உபயோகப்படுத்தப் படுகிறது. எலுமிச்சை பழம் மட்டுமில்லாமல் அதன் தோலிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. எலுமிச்சை பழத் தோலில் உள்ள சத்துகளை நேரடியாக பெற முடியாது. இதற்கு பதிலாக எலுமிச்ச பழத் தோலை நீர் சேர்த்து கொதிக்க வைத்தால் அதில் உள்ள சத்துகள் நீரில் சேர்ந்து விடும்.

தயாரிக்கும் முறை:-

எலுமிச்சை பழத்தை துண்டு துண்டுகளாக வெட்டி நீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை குளிர்வித்து வடிகட்டினால் போதும். விருப்பத்திற்கேற்ப தேன் சேர்த்து கொள்ளலாம். இதை காலையில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

  • இந்த நீரில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • உங்களது உடலில் ஆற்றல் குறைந்து காணப்பட்டால் தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சை கலந்த இந்த நீரை குடித்தால் நாள் முழுவதும் முழு ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.
  • உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்து உடல் இயக்கத்தை சீராக வைத்து கொள்கிறது.
  • உடலில் உள்ள நச்சுகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு அமிலத்தன்மையை சீராக வைத்து கொள்கிறது.
  • அதிகப்படியான உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த நீரை குடிப்பதால் உடல் பருமன் சீராகும். மேலும் மன அழுத்தம் குறையும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.