அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்குதா அப்போ இதை படிங்க!

அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்குதா?

நமது உடலின் மொத்த எடையில் 80% நீர் மட்டுமே உள்ளது. உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைத்திருப்பது மிக முக்கியம். உடலில் உள்ள நீரின் அளவு குறைந்தால் உடல்நல பாதிப்புகளை உண்டு பண்ணும்.
சீரான அளவில் சீரான இடைவெளியில் நீர் உட்கொண்டால் உடலுக்கு தேவையான சுறுசுறுப்பை வழங்குகிறது. இதன் மூலம் நமது சிறுநீரகம் சரியாக இயங்க முடியும். அது நீராகவோ அல்லது குளிர்பானங்களாகவோ இருக்கலாம்.
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து இருக்குறீர்களா என்பதை உங்களிடம் இருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் நிறத்தை பொறுத்தே சொல்லலாம்.
சிறுநீர் மங்கிய நிறத்தில் வெளிவந்தால் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். உடலில் நீரின் அளவு குறைவதால் மூளை, சிறுநீரகம் மற்றும் இதர உடல் உறுப்புகளின் செயல்பாடும் குறைகிறது.
உடலில் நீர் வற்றி காணப்பட்டால் மயக்கம், மந்தம், தோலில் வறட்சி, தலைவலி போன்றவை ஏற்படுகிறது. இது தொடர்ந்து நீடித்தால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை நீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.